மாவட்ட செய்திகள்

கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி செத்தன. + "||" + Fire accident

கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி செத்தன.

கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி செத்தன.
வேப்பந்தட்டை அருகே உள்ள கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி செத்தன.
வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கோழிப்பண்ணை நடத்தி வருபவர் பெரியசாமி (வயது 45). இவர் கோழிப்பண்ணையில் சமீபத்தில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் கோழிப்பண்ணையில் திடீரென தீ பிடித்து மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி செத்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கோழிப் பண்ணைக்கு அருகே சோளத்தட்டைக்கு விவசாயி ஒருவர் வைத்த தீ கோழிப்பண்ணைக்கு பரவியது தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கரும்பு தோட்டத்தில் தீ விபத்து
கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது
2. பெருந்துறை சிப்காட் வளாகத்தில் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
3. குளித்தலை அருகே பனைமரத்தில் திடிரென தீ
குளித்தலை அருகே பனைமரத்தில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.
4. டாஸ்மாக் கடை அருகே தீ விபத்து
டாஸ்மாக் கடை அருகே தீ விபத்து ஏற்பட்டது.
5. சாலையோரத்தில் கொட்டப்பட்டு இருந்த கழிவுகளில் திடீர் தீ
சாலையோரத்தில் கொட்டப்பட்டு இருந்த கழிவுகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.