மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் வி.சி.க. பிரமுகர் வீட்டில் நகை, பணம் திருட்டு + "||" + Jewelry, money theft

பெரம்பலூரில் வி.சி.க. பிரமுகர் வீட்டில் நகை, பணம் திருட்டு

பெரம்பலூரில் வி.சி.க. பிரமுகர் வீட்டில் நகை, பணம் திருட்டு
பெரம்பலூரில் வி.சி.க. பிரமுகர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.
பெரம்பலூர்
பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள முத்துலட்சுமி நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 40). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளரான இவர் நேற்று முன்தினம் இரவு கட்சி தேர்தல் வேலையை முடித்துக்கொண்டு வீட்டில் ஹாலில் தூங்கினார். அவரது மனைவியும், மகளும் படுக்கை அறையில் தூங்கியுள்ளனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை நடராஜன் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் ஜன்னல் வழியாக நடராஜனுக்கு மயக்க மருந்து  அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டின் அறையினுள் தொங்க விடப்பட்டிருந்த நடராஜனின் சட்டை பையில் இருந்து ரூ.15 ஆயிரம், படுக்கை அறையில் கைப்பையில் வைக்கப்பட்டு இருந்த 4 பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மயக்கம் தெளிந்து திடீரென்று எழுந்த நடராஜன் மர்ம நபர்களை கண்டதும், அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுதொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நடராஜன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு
மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், பணம் திருடப்பட்டது.
2. ஈரோட்டில் தேர்தல் பறக்கும்படை சோதனையில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.10 லட்சம் தங்க நாணயங்கள் பறிமுதல்
ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. மருந்து கடை உரிமையாளர் வீட்டில் 17 பவுன் நகை, பணம் திருட்டு
ஆரல்வாய்மொழி அருகே மருந்து கடை உரிமையாளர் வீட்டில் 17 பவுன் நகை பணம் திருட்டு போனது. இதுதொடர்பாக வேலைக்காரி கைது செய்யப்பட்டார்.
4. மேச்சேரியில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
5. எட்டயபுரம் அருகே வியாபாரிகளை தாக்கி நகை, பணம் பறிப்பு
எட்டயபுரம் அருகே வியாபாரிகளை தாக்கி நகை, பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.