மாவட்ட செய்திகள்

விதிமுறையை மீறி வாக்குச்சாவடிக்கு சென்றதாக நடிகை சுருதிஹாசன் மீது புகார் + "||" + Actress Surudihasan complains that she went to the polls illegally

விதிமுறையை மீறி வாக்குச்சாவடிக்கு சென்றதாக நடிகை சுருதிஹாசன் மீது புகார்

விதிமுறையை மீறி வாக்குச்சாவடிக்கு சென்றதாக நடிகை சுருதிஹாசன் மீது புகார்
கோவையில் கமல்ஹாசனுடன் விதிமுறையை மீறி வாக்குச்சாவடிக்கு சென்றதாக நடிகை சுருதிஹாசன் மீது தேர்தல் அதிகாரியிடம் பாரதீய ஜனதாவினர் புகார் அளித்துள்ளனர்.
கோவை

கோவையில் கமல்ஹாசனுடன் விதிமுறையை மீறி வாக்குச்சாவடிக்கு சென்றதாக நடிகை சுருதிஹாசன் மீது தேர்தல் அதிகாரியிடம் பாரதீய ஜனதாவினர் புகார் அளித்துள்ளனர்.

வாக்குச்சாவடிக்கு சென்ற சுருதிஹாசன்

கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிடும் வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கெம்பட்டி காலனியில் உள்ள வாக்குச் சாவடிக்கும் கமல்ஹாசன் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் அவருடைய மகள் சுருதி ஹாசனும் வாக்குச்சாவடிக்குள் சென்றார். 

தேர்தல் விதிமுறைப்படி வேட்பாளர் மற்றும் அவரது அனுமதி பெற்ற முகவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல வேண்டும். ஆனால் தேர்தல் விதியை மீறி சுருதிஹாசன் வாக்குச்சாவடிக்குள் சென்றதாக பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வந்தனர்.

பா.ஜனதா புகார்

இது தொடர்பாக கோவை மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் நந்தகுமார் தெற்கு சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கோவை தெற்கு சட்டசபை தொகுதி வேட்பாளர் கமல்ஹாசனுடன் அவருடைய மகளும், நடிகையுமான சுருதிஹாசன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். தேர்தல் விதியை மீறி சுருதிஹாசன் வாக்குச் சாவடிக்குள் நுழைந்துள்ளார். எனவே அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகை சுருதிஹாசன் மீது பாரதீய ஜனதாவினர் கொடுத்த புகார் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.