மாவட்ட செய்திகள்

18 பேருக்கு கொரோனா தொற்று + "||" + corona

18 பேருக்கு கொரோனா தொற்று

18 பேருக்கு கொரோனா தொற்று
ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது எகிறி வருகிறது. இந்த பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து ஒற்றை எண்ணிக்கையில் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 பேர் கொரோனா ெதாற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
விழிப்புணர்வு
இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 6 ஆயிரத்து 653 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
மேலும் தற்போது 110 பேர் மட்டும் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 138 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும், அடிக்கடி கிருமி நாசினி ெகாண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் புதிதாக 83 பேருக்கு கொரோனா உறுதி
மதுரையில் புதிதாக 83 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
2. மேலும் 24 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. கொரோனா தொற்று அதிகரிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து உள்ளது. எனவே பொதுமக்கள் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 304 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 304 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
5. ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு கொரோனா ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி
ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு கொரோனா ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி.