மாவட்ட செய்திகள்

விடிய, விடிய காத்திருந்த அதிகாரிகள், பூத் ஏஜெண்டுகள் + "||" + Waiting officers

விடிய, விடிய காத்திருந்த அதிகாரிகள், பூத் ஏஜெண்டுகள்

விடிய, விடிய காத்திருந்த அதிகாரிகள், பூத் ஏஜெண்டுகள்
எஸ்.புதூர் ஒன்றிய வாக்குச்சாவடி மையங்களில்தேர்தல் அதிகாரிகள் மற்றும் பூத் ஏஜெண்டுகள் விடிய, விடிய காத்திருந்தனர்.
எஸ்.புதூர்,'

தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தல் நடந்தது. திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ்.புதூர் ஒன்றிய பகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.
 எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள 56 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்கு மின்னணு எந்திரங்களை எடுக்க 4 மண்டலமாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு மண்டலம் வாரியாக லாரிகள் சென்று அந்த வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் ஏற்றப்பட்டன.
இந்த நிலையில் 3-வது மண்டலத்தில் உள்ள செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, பிரான்பட்டி, கணபதிபட்டி, நாகமங்கலம் வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குப் பெட்டிகளை எடுக்க லாரி வராததால் அங்குள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் பூத் ஏஜெண்டுகள் விடிய, விடிய காத்திருந்தனர்.
நாகமங்கலம் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு எந்திரங்கள் நேற்று காலை 7 மணிக்கு தான் லாரியில் ஏற்றி எடுத்து செல்லப்பட்டது. அதன் பின்னரே அதிகாரிகள், பூத் ஏஜெண்டுகள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.