மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் விபத்தில் முதியவர் சாவு + "||" + Elderly death in motorcycle accident

மோட்டார்சைக்கிள் விபத்தில் முதியவர் சாவு

மோட்டார்சைக்கிள் விபத்தில் முதியவர் சாவு
வாசுதேவநல்லூரில் மோட்டார்சைக்கிள் விபத்தில் முதியவர் இறந்தார்.
வாசுதேவநல்லூர், ஏப்:
வாசுதேவநல்லூர் புதுக்காலனி தெருவை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி (வயது 62). இவர் கடந்த 2-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் வாசுதேவநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள ஆற்றுப்பாலத்தின் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டர் சைக்கிள், பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த வெள்ளப்பாண்டி, புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளப்பாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேனீக்கள் கொட்டி முதியவர் சாவு
தேனீக்கள் கொட்டி முதியவர் சாவு
2. விபத்தில் காயம் அடைந்த முதியவர் சாவு
சுரண்டை அருகே விபத்தில் காயம் அடைந்த முதியவர் இறந்தார்.
3. மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த முதியவர் சாவு
மானூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முதியவர் இறந்தார்.
4. கார் மோதி முதியவர் சாவு
மானூர் அருகே கார் மோதி முதியவர் இறந்தார்.