மாவட்ட செய்திகள்

2 வாலிபர்கள் பலி ஒருவர் படுகாயம் + "||" + two youths died in accident

2 வாலிபர்கள் பலி ஒருவர் படுகாயம்

2 வாலிபர்கள் பலி ஒருவர் படுகாயம்
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
வல்லம்;
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். 
மோட்டார் சைக்கிளில் சென்றனர்
தஞ்சை அருகே உள்ள சென்னம்பட்டியை சேர்ந்தவர் அர்ச்சுணன். இவருைடய மகன் சரத்குமார்(வயது 25). புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டையை சேர்ந்த ஷர்புதீன் மகன் மன்சூர்(24). சரத்குமார் நேற்று மாலை 5 மணி அளவில் அற்புதாபுரத்தில் இருந்து வல்லம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். 
அப்போது மன்சூர் தஞ்சையில் இருந்து கல்லாக்கோட்டைக்கு அற்புதாபுரம் வழியாக சென்றார். மன்சூரின் பின்புறம் ஸ்கூட்டரில் தஞ்சை அருகே உள்ள புனல்குளத்தை சேர்ந்த தியாகராஜன்(57) வந்து கொண்டு இருந்தார். 
பரிதாப சாவு
அப்போது எதிர்பாராதவிதமாக சரத்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், மன்சூர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதனால் படுகாயம் அடைந்த சரத்குமார், மன்சூர் ஆகியோர் கீேழு விழுந்தனர். அப்போது பின்புறம் தியாகராஜன் ஓட்டி வந்த ஸ்கூட்டர் ஏற்கனவே விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. இதனால் அவரும் கீேழு விழுந்து படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளில் இருந்த கீேழு விழுந்து காயம் அடைந்த சரத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் மன்சூரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மன்சூரும் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்கூட்டரில் இருந்து கீேழ விழுந்து காயம் அடைந்த தியாகராஜன் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
இந்த விபத்து குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் வல்லம் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.