மாவட்ட செய்திகள்

ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.1¼ லட்சம் குட்கா பறிமுதல் - 2 பேர் கைது + "||" + tobacco seized in namakal

ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.1¼ லட்சம் குட்கா பறிமுதல் - 2 பேர் கைது

ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.1¼ லட்சம் குட்கா பறிமுதல் - 2 பேர் கைது
நாமக்கல்லில் ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்,

நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை கொண்டிசெட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோகனூரில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

இந்த சோதனையின்போது 5 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்கா கடத்தி வரப்படுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 மூட்டைகளில் இருந்த சுமார் 75 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ஆம்னி வேனில் வந்த மோகனூரை சேர்ந்த செல்லியப்பன் (வயது 51), உன்னியூரை சேர்ந்த மணிகண்டன் (31) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மற்றும் ஆம்னி வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் நாமக்கல் பகுதியில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்ய குட்காவை கொண்டு வந்து இருப்பது தெரியவந்து உள்ளது. இவர்கள் எங்கிருந்து வாங்கி வருகிறார்கள்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.