மாவட்ட செய்திகள்

சாலைகளில் தேங்கும் கழிவுநீர் + "||" + Stagnant sewage

சாலைகளில் தேங்கும் கழிவுநீர்

சாலைகளில் தேங்கும் கழிவுநீர்
பரமக்குடி சாலைகளில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது.
பரமக்குடி, 
பரமக்குடியில் ஐந்து முனைப்பகுதியிலிருந்து கிருஷ்ணா தியேட்டர் பகுதி வரை ரூ.4 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாரு கால் அமைக்கும் பணியும், ஒட்டப்பாலம் பகுதி முதல் ஐந்து முனை பகுதி வரை சாலையின் இருபுறமும் அலங்கார கற்கள் பதிக்கும் பணி ரூ.2 கோடி மதிப்பீட்டிலும் நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கால்வாய்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. அதனால் கொல்லம் பட்டறை தெரு, உழவர் சந்தை பகுதி, மேலப்பள்ளிவாசல் பகுதி, சவுகத் அலி தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் சாலை முழுவதும் குளம் போல் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. 
இதனால் அப்பகுதியில் மக்கள் செல்லவே அவதியடைகின்றனர். தேங்கியுள்ள கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களை பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாக்கடை நீரை கடந்துசெல்லும் போது தேங்கி கிடக்கும்கழிவு நீர் நடந்து செல்பவர்கள் மீது படுகிறது. இதனால் பிரச்சினைகளும் ஏற்படுகிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்களும், வியாபாரிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் தேங்கி கிடக்கும் கழிவுநீரை தினமும் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்