மாவட்ட செய்திகள்

தாளவாடி அருகேகன்றுக்குட்டியை கடித்து குதறிய சிறுத்தை + "||" + sirutthai

தாளவாடி அருகேகன்றுக்குட்டியை கடித்து குதறிய சிறுத்தை

தாளவாடி அருகேகன்றுக்குட்டியை கடித்து குதறிய சிறுத்தை
தாளவாடி அருகே கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து குதறியது.
தாளவாடி அருகே கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து குதறியது.
சிறுத்தை
தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூரை சேர்ந்தவர் மாதள்ளி (வயது 61). விவசாயி. இவர் வனப்பகுதியையொட்டிய தோட்டத்து வீட்டில் வசிக்கிறார். தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மாடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் மாதள்ளி தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது சிறுத்தை ஒன்று கன்றுக்குட்டியை கடித்து குதறிக்கொண்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாதள்ளி சத்தம் போடவே சிறுத்தை அங்கிருந்து ஓடி விவசாய தோட்டத்துக்குள் சென்று மறைந்தது. மேலும் இதுபற்றி அவர் தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தையின் கால்தடத்தை பதிவு செய்தனர்.
விவசாயிகள் பீதி
சிறுத்தை கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த கன்றுக்குட்டிக்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார். தோட்டத்துக்குள் புகுந்து சிறுத்தை கன்றுக்குட்டியை தாக்கிய சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி படுகாயம்
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி படுகாயம் அடைந்தது.
2. தாளவாடி அருேக கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்
தாளவாடி அருேக கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்
3. தாளவாடி அருகே வனச்சாலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்
தாளவாடி அருகே வனச்சாலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது
4. தாளவாடி அருகே வனச்சாலையில் சிறுத்தை நடமாட்டம்
தாளவாடி அருகே வனச்சாலையில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது.
5. வடக்கு விஜயநாராயணம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்
வடக்கு விஜயநாராயணம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம் செய்தது. கன்றுக்குட்டியை கடித்துக் கொன்றது.