மாவட்ட செய்திகள்

சேலத்தில் இளம்பெண் மர்ம சாவு + "||" + Mysterious death of a woman in Salem

சேலத்தில் இளம்பெண் மர்ம சாவு

சேலத்தில் இளம்பெண் மர்ம சாவு
சேலத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார்.
சேலம்:
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன், பெயிண்டர். இவருடைய மனைவி மஞ்சுளா (வயது 21). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் நேற்று மஞ்சுளா வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே மஞ்சுளாவின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில், தங்களது மகள் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறி உள்ளனர். அதன்பேரில் போலீசார் இளம்பெண் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மஞ்சுளாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சம்பவம் தொடர்பாக சேலம் உதவி கலெக்டர் மாறன் விசாரணை நடத்தி வருகிறார்.