மாவட்ட செய்திகள்

ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டல் தொழிலாளி பலி + "||" + Hotel worker killed in motorcycle accident near Urapakkam

ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டல் தொழிலாளி பலி

ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டல் தொழிலாளி பலி
ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டல் தொழிலாளி பலியானார்.

தவறி விழுந்தார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் யாதவர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 51), இவர் சென்னையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்று ஓட்டு போடுவதற்காக சரவணன் தனது நண்பர் சுகுமார் என்பவருடன் கடந்த 5-ம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து கலசப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஊரப்பாக்கம் அருகே செல்லும்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சரவணன் படுகாயம் அடைந்தார்.

சாவு

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சுகுமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் பணியின் போது அரசு பஸ் மோதி சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பலி மேலும் 2 போலீசார் படுகாயம்
சிவகங்கை அருகே தேர்தல் பணியின் போது அரசு பஸ் மோதி சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
2. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் அடிக்கடி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பெரம்பலூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
3. ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் 19 தலீபான் பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
4. சிமெண்டு மூடைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது
புழுதிபட்டி அருகே சிமெண்டு மூடைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
5. பஸ் மோதியதில் தொழிலாளி படுகாயம்
இளையான்குடி அருகே பஸ் மோதியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.