மாவட்ட செய்திகள்

மதுராந்தகம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை + "||" + Teen commits suicide by hanging near Madurantakam

மதுராந்தகம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

மதுராந்தகம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
மதுராந்தகம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

குடும்பத்தகராறு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கெண்ரச்சேரியைச் சேர்ந்தவர் சின்ராசு. மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வராணி (வயது 22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் மதுராந்தகம் அடுத்த கெண்டிரச்சேரியில் குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகளும் 3 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர். செல்வராணிக்கும் அவரது கணவருக்கும் பல நாட்களாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

தற்கொலை

இதையடுத்து செல்வராணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவரது தந்தை மதுராந்தகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் அவரது உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வராணிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் இது தொடர்பாக மதுராந்தகம் ஆர்.டி.ஓ. லட்சுமிபிரியா விசாரித்து வருகிறார்.

 


தொடர்புடைய செய்திகள்

1. திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. லாலாபேட்டை அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை
லாலாபேட்டை அருகே குடும்ப தகராறால் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. சட்டசபை தேர்தல் நடந்த மறுநாளில் கள்ளக்குறிச்சி கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீஸ் தீவிர விசாரணை
சட்டசபை தேர்தல் முடிந்த மறுநாளில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமை காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
சோழவந்தான் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. விஷம் குடித்து சிறுமி தற்கொலை
விஷம் குடித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.