மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தி.மு.க., அ.தி.மு.க.வினர் 50 பேர் மீது வழக்கு + "||" + DMK, ADMK have filed a case against 50 people for violating election rules near Tiruvallur

திருவள்ளூர் அருகே தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தி.மு.க., அ.தி.மு.க.வினர் 50 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் அருகே தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தி.மு.க., அ.தி.மு.க.வினர் 50 பேர் மீது வழக்கு
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்தரை பகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திரளான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சத்தரை பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன், வெங்கடேசன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் 12 பேர் தேர்தல் விதிமுறைகளை மீறி அ.தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து கடம்பத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரமேஷ், நாராயணன், மனோஜ் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் 38 பேர் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் கொரோனா தொற்று ஏற்படுத்தும் விதமாக ஒன்றுகூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மப்பேடு போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் 12 பேர், தி.மு.க. நிர்வாகிகள் 38 பேர் என மொத்தம் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 


தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் அமைச்சர் குறித்து அவதூறு தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் வழக்கு
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான பி.வி.ரமணா போட்டியிடுகிறார்.
2. அ.தி.மு.க.-தி.மு.க.வினர் மோதல்; 26 பேர் மீது வழக்கு
திருப்புவனம் அருகே அ.தி.மு.க.-தி.மு.க.வினர் நேருக்கு நேர் மோதி கொண்டனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
3. தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் தொடர்ந்து செல்ல அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்; டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் தொடர்ந்து செல்ல அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. தேர்தல் விதி மீறியவர் மீது வழக்கு
இளையான்குடி அருகே தேர்தல் விதி மீறியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்கு
இளையான்குடி அருகே பணப்பட்டுவாடா செய்ததாக அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.