மாவட்ட செய்திகள்

கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது; 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு; சென்னை மாநகராட்சி தகவல் + "||" + The most affected by corona are those aged 30 to 39; Chennai Corporation Information

கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது; 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு; சென்னை மாநகராட்சி தகவல்

கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது; 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு; சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக ஆண்களையே அதிகம் தாக்குகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வேகமெடுக்கும் கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை சென்னையில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 851 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 880 பேர் பூரணமாக குணமடைந்து உள்ளனர். 10 ஆயிரத்து 685 பேர் தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 4 ஆயிரத்து 286 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.
  
ஆண்கள் அதிகம்
சென்னைக்கு இதுவரை வெளிமாநிலங்களில் இருந்து வந்த 24 ஆயிரத்து 684 விமானங்களில் பயணம் செய்த 23 லட்சத்து 77 ஆயிரத்து 375 பயணிகளை பரிசோதித்ததில், 425 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிவந்துள்ளது.சென்னையில் அதிகமாக 30 முதல் 39 வயதினர் 20.14 சதவீதமும், 40 முதல் 49 வயதினர் 18.37 சதவீதமும், 50 முதல் 59 வயதினர் 17.97 சதவீதமும், 20 முதல் 29 வயதினர் 17.93 சதவீதமும், 60 முதல் 69 வயதினர் 11.13 சதவீதமும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குறைந்தப்பட்சமாக 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1.60 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 59.71 சதவீதமும், பெண்கள் 40.29 சதவீதம் பேரும் அடங்குவர் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கொரோனா அதிகரிக்க வெளிமாநில தொழிலாளர்களே காரணம்; ராஜ்தாக்கரே சொல்கிறார்
மராட்டியத்தில் கொரோனா அதிகரிக்க வெளிமாநில தொழிலாளர்களே காரணம் என ராஜ்தாக்கரே தெரிவித்துள்ளார்.
2. மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை- சுகாதாரத்துறை மந்திரி தகவல்
மராட்டியத்தில் இதுவரை 82 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
3. ஐ.பி.எல் : பெங்களூரு அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா
பெங்களூரு அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா ஒருநாள் பாதிப்பு; உலக அளவில் முதலிடத்தில் இந்தியா
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உள்ளது.
5. இந்தியாவில் முதல் முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இன்று கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது.