மாவட்ட செய்திகள்

எட்டயபுரம் அருகேலாரி கவிழந்து டிரைவர் காயம் + "||" + lorry overturns near ettayapuram, driver injured

எட்டயபுரம் அருகேலாரி கவிழந்து டிரைவர் காயம்

எட்டயபுரம் அருகேலாரி கவிழந்து டிரைவர் காயம்
எட்டயபுரம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் காயம் அடைந்தார்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலையில் எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள சொட்டநாயக்கனூர் புதுப்பட்டியை சேர்ந்த காசிலங்கம் மகன் விஜயராஜன் என்பவர் ஓட்டிச் சென்றார்.  எட்டயபுரம் அருகேயுள்ள ஒரு தனியார் எடை மேடை அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று நிலை தடுமாறி சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நிலக்கரி அனைத்தும் ரோட்டில் சிதறியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த லாரி டிரைவரை மீட்டு  எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார், சாலையில் கொட்டி கிடந்த நிலக்கரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.