மாவட்ட செய்திகள்

தெற்கு ஆத்தூரில்பெண் மீது தாக்குதல் + "||" + attack on a women in south attur

தெற்கு ஆத்தூரில்பெண் மீது தாக்குதல்

தெற்கு ஆத்தூரில்பெண் மீது தாக்குதல்
தெற்கு ஆத்தூரில் பெண் மீது தாக்குதல் நடத்திய 3 வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தெற்கு ஆத்தூர் சேனையர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி காளீஸ்வரி (வயது 52).  இவர் தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் ராஜகன்ணா நகரில் வசித்து வருகிறார்..
கடந்த தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று சொந்த ஊருக்கு அவர்கள் வந்துள்ளனர். அன்று மாலையில் தனது மகன் சதீஷ் வீடு திரும்பாத நிலையில் காளீஸ்வரி அவரை தேடிச் சென்றுள்ளார்.
அங்குள்ள உச்சினிமாகாளி அம்மன் கோவில் அருகில் சென்று தேடி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மது போதையில் மோட்டார் சைக்கிளில் இருந்த தெற்கு மறாந்தயை சேர்ந்த அன்புராஜ், தெற்கு ஆத்தூரை சேர்ந்த சூசை மகன் செல்வின், மேக லிங்கம் மகன் வேல்முருகன், ஆகிய மூவரும் காளிஸ்வரியிடம் அவரது மகனை பற்றி ஆபாசமாக பேசி உள்ளனர். இதை கண்டித்த காளீஸ்வரியை, அந்த 3 வாலிபர்களும் வசைபாடியதுடன்,  அவரது சேலையை பிடித்து இழுத்து கையாளும் கட்டையாலும் அடித்து கீழே தள்ளியுள்ளனர். இச்சம்பவம் அறிந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் திரண்டு வந்துள்ளனர். இதை கவனித்த 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக காளீஸ்வரி ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் தப்பி ஓடிய 3 வாலிபர்களையும் தேடி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆலங்குளம் அருகே பெண்ணை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை
ஆலங்குளம் அருகே பெண்ணை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.