மாவட்ட செய்திகள்

கொம்மடிக்கோட்டைவாலைகுருசாமி கோவில் சித்திரை திருவிழா14ந் தேதி தொடங்குகிறது + "||" + kommadikottai chiththirai festival at valaikurusamy temple strats 14th

கொம்மடிக்கோட்டைவாலைகுருசாமி கோவில் சித்திரை திருவிழா14ந் தேதி தொடங்குகிறது

கொம்மடிக்கோட்டைவாலைகுருசாமி கோவில் சித்திரை திருவிழா14ந் தேதி தொடங்குகிறது
கொம்மடிக்கோட்டை வாலைகுருசாமி கோவிலில் சித்திரை திருவிழா 14ந் தேதி தொடங்குகிறது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டையில் பாலாசேஷாத்திரம் என்ற அழைக்கப்பட்டு ஸ்ரீவாலைகுருசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ஏப். 14ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 5 மணியில் இருந்து 6 மணி வரை அனுங்ஞை, கணபதி ஹோமம், யாகபூஜை, 6.30 மணிக்கு சுவாமி உற்சவ விநாயகர், ஸ்ரீவாலாம்பிகை அம்பாள், சுவாமி ஸ்ரீசந்திரசேகர், மனோன்மணியம் அம்பாள் சமேதராக எழுந்தருள கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர் சுவாமிகள் பிரகார உலா வந்து மணிமண்டபத்தில் உற்சவ மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். காலை 10.30மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கும், மூல மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 6.30ணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8மணிக்கு சுவாமி உற்சவ விநாயகர் சம்பரத்திலும், ஸ்ரீபாலாதிரிபுரசுந்தரி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 15ந் தேதி ஏப். 19ந் தேதி வரை தினமும் காலை பூஜை, 10மணிக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம், 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 5.30  மணிக்கு சாயரட்சை பூஜை, 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 7 மணிக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம், 8.15மணிக்கு ஸ்ரீவாலாம்பிகை அம்பாள் சேத்திர வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 20-ந் தேதி காலை 6மணிக்கு மஞ்சள் பெட்டி ஊர்வலம், அபிஷேகம், சிறப்பு பூஜை, 10மணிக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து உச்சிகால பூஜை, சாயரட்சை பூஜை மாலை 5மணிக்கு ஸ்ரீவாலாம்பிகை அம்பாள் சேத்திர வலம் வருதல் நிகழ்ச்சி, 7மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8.30மணிக்கு சுவாமி உற்சவ விநாயகர் சப்பரத்திலும், ஸ்ரீநடராஜர், சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர், சமேதரராய் புஷ்ப அலங்கார சப்பரத்தில் வீதி உலா வந்து அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து 23ந் தேதி காலை 6மணிக்கு பூஜை, 10மணிக்கு சிறப்பு அபிஷேகம், 12மணிக்கு உச்சிக்கால பூஜை, 5மணிக்கு சாயரட்சை பூஜை, 5.30மணிக்கு ஸ்ரீவாலாம்பிகை அம்பாள் சேத்திர வலம் வருதல், இரவு 9மணிக்கு சுவாமி உற்சவ விநாயகர் சப்பரத்திலும், ஸ்ரீசந்திரசேகரர் மனோண்மணி அம்பாள் சமேதரராக ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து அருள்பாலித்தல், 24ந் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.