மாவட்ட செய்திகள்

காதல் ஜோடி தஞ்சம் + "||" + The romantic couple took refuge

காதல் ஜோடி தஞ்சம்

காதல் ஜோடி தஞ்சம்
வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது
வடமதுரை:

அய்யலூர் அருகே உள்ள எஸ்.புதுப்பட்டியை சேர்ந்தவர் ரம்யா (வயது 21). இவர், நர்சிங் படித்து விட்டு வீட்டில் இருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (26). இவர், சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது.

கடந்த சில மாதங்களாக 2 பேரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி, திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். 

அதன்பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் காதல்ஜோடி மேஜர் என்பதால், அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.