உண்டியல் காணிக்கை மூலம் ரூ.27 லட்சம் வருவாய்


உண்டியல் காணிக்கை மூலம் ரூ.27 லட்சம் வருவாய்
x
தினத்தந்தி 8 April 2021 1:59 PM GMT (Updated: 8 April 2021 1:59 PM GMT)

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.27 லட்சம் வருவாய் கிடைத்தது

முருகபவனம்:

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் மாசித் திருவிழா நிறைவு பெற்றதும் உண்டியல் திறப்பு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசி திருவிழா கொரோனா பரவல் தொற்று காரணமாக பல்வேறு நிபந்தனைகளுடன் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி திருவிழா நடந்து நிறைவு பெற்றது.

 இந்தநிலையில் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையில், கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர். 

மொத்தம் 11 பொது உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதன் மூலம் ரூ.27 லட்சம் வருவாயாக கிடைத்தது. மேலும் 468 கிராம் தங்கம், 1 கிலோ 770 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டிருந்தது என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story