குன்னூரில் பூத்து குலுங்கும் வாடா மலர்கள்


குன்னூரில் பூத்து குலுங்கும் வாடா மலர்கள்
x
தினத்தந்தி 8 April 2021 2:23 PM GMT (Updated: 8 April 2021 2:23 PM GMT)

குன்னூரில் வாடா மலர்கள் பூத்து குலுங்குகிறது.

குன்னூர்

நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் வாடா மலர்கள் என்று அழைக்கப்படும் காகித பூக்கள் பூக்கின்றன. இந்த பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். 

இது 40 நாட்கள் வரை வாடாத குணமுள்ளது. இந்த மலருக்கு மணம் கிடையாது. இந்த மலர்களை பறித்து ஒரு கட்டாக கட்டி சுற்றுலா பயணிகளுக்கு ரூ.20 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் குன்னூரில் இருந்து வண்ணாரப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் காகித மலர்கள் பூத்து குலுங்குகின்றன. 

இதுபோல பல்வேறு இடங்களில் சாலையோரத்தில் காகித மலர் பூத்துக்குலுங்கின்றன. இதனை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். 

மேலும் சிலர் தங்களது செல்போனில் படம் எடுத்து கொள்கின்றனர். இது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.


Next Story