மாவட்ட செய்திகள்

தொற்று பரவலை தடுக்க கொரோனா பாதிப்பு உள்ள இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் + "||" + Special camp in places with corona vulnerability

தொற்று பரவலை தடுக்க கொரோனா பாதிப்பு உள்ள இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்

தொற்று பரவலை தடுக்க கொரோனா பாதிப்பு உள்ள இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்
தொற்று பரவலை தடுக்க கொரோனா பாதிப்பு உள்ள இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
ஊட்டி

தொற்று பரவலை தடுக்க கொரோனா பாதிப்பு உள்ள இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 20-க்கும் மேல் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 30 பேருக்கு வைரஸ் உறுதியானது. 

சமீபத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 60-க்கும் கீழ் இருந்தது. தற்போது தொற்று உறுதி செய்யப்பட்ட 168 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் உள்ளவர்களிடம் மாதிரி சேகரித்து பரிசோதனை செய்தால் வைரஸ் பாதிக்காமல் இருந்தது. தற்போது 2-வது அலை பரவி வருவதால் தொடர்பில் உள்ளவர்களுக்கும் தொற்று உறுதியாகி வருகிறது. 

இதனால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கொரோனா பாதித்த நபர்கள் வசித்த பகுதிகளில் சுகாதார துறையினர் நடமாடும் வாகனம் மூலம் முகாமிட்டு 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று வருகிறவர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காய்ச்சல் கண்டறியும் முகாம்

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரியில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

தொற்று பரவலை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தடுப்பூசி போடும் பணி தினமும் நடந்து வருகின்றது. மேலும் தோட்ட தொழிலாளர்கள் அதிகம் பேர் பணிபுரியும் இடங்கள், சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் சுற்றுலா தலங்களில் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதித்த நபர்கள் வசிக்கும் பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி இருக்கிறதா என்று சுகாதார குழுவினர் சோதனை செய்வார்கள்.

 காய்ச்சல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொற்று அதிகரித்து வருவதால் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.