மாவட்ட செய்திகள்

9 ஓட்டுகள் வித்தியாசம் குறித்து அதிகாரிகள் விசாரணை + "||" + Authorities are investigating the difference of 9 votes

9 ஓட்டுகள் வித்தியாசம் குறித்து அதிகாரிகள் விசாரணை

9 ஓட்டுகள் வித்தியாசம் குறித்து அதிகாரிகள் விசாரணை
9 ஓட்டுகள் வித்தியாசம் குறித்து அதிகாரிகள் விசாரணை
கோவை

சிங்காநல்லூர் தொகுதி 184 எண் வாக்குச்சாவடியில் பதிவானதில் 9 ஓட்டு வித்தியாசம் இருப்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

9 ஓட்டு பிரச்சினை

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 184- வது எண் வாக்குச்சாவடியில் மொத்த ஓட்டுகள் 966. இங்கு ஓட்டுப்பதிவின்போது மொத்தம் 653 ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரியின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் வாக்குப்பதிவு எந்திரத்தில் 662 ஓட்டு பதிவாகி உள்ளதாக காட்டியுள்ளது. இதனால் 9 ஓட்டு வித்தியாசம் எப்படி வந்தது என்பதில் குளறுபடி நிலவுகிறது.

வேட்பாளர் புகார்

இது குறித்து அ.ம.மு.க. கட்சியின் சிங்காநல்லூர் தொகுதியின் வேட்பா ளர் எஸ்.ஆர்.செல்வா உள்பட பலரும் புகார் செய்துள்ளனர். மேலும் அந்த வாக்குச்சாவடியில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, 9 ஓட்டு வித்தியாசம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஓட்டுப்போட்டதை பதிவேட்டில் முறையாக பதியாமல் விட்டார்களா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றனர்.