மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே நிலத்தில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் + "||" + A single elephant roars into the ground

ஆம்பூர் அருகே நிலத்தில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்

ஆம்பூர் அருகே  நிலத்தில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்
ஆம்பூர் அருகே நிலத்தில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்
ஆம்பூர்

ஆம்பூர் அருகே கிராம பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆம்பூர் அருகே கொத்தூர் பகுதியை சேர்ந்த கோமதி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள வாழை மரங்களை ஒற்றை யானை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. 

மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த முள்வேலிகளையும் உடைத்தெறிந்தது. இதையடுத்து அருகிலுள்ள மற்றொரு கிராமமான பாலூர் பகுதிக்கு சென்று செல்வம் என்பவருக்கு சொந்தமான நெற்பயிர்களை சேதப்படுத்தியது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் வனச்சரகர் மூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.