மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா + "||" + Corona to Ranipet District Collector

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா
ராணிப்பேட்டை
-
நாடு முழுவதும் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கடந்தசில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தேர்தல் விழிப்புணர்வு, வாக்குப்பதிவு பணிகள், பதிவான வாக்கு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைத்து, அதனை பார்வையிடும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். 

முன்னதாக அவர் கடந்த மாதம் கொரோனா தொற்று தடுப்பூசி போட்டிருந்தார். இந்த நிலையில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜுக்கு நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல், சளி அறிகுறி இருந்தது. அதனால் அவர் நேற்று வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.