மாவட்ட செய்திகள்

கவரை, நெகனூர் அரசு பள்ளிகளில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு + "||" + In government schools Primary Education Officer Review

கவரை, நெகனூர் அரசு பள்ளிகளில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு

கவரை, நெகனூர் அரசு பள்ளிகளில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு
முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு
விழுப்புரம், 
விழுப்புரம் மாவட்டம் கவரை கிராமத்தில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, நெகனூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிளஸ்-2 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட திருப்புதல் தேர்வை பார்வையிட்ட அவர், மாணவ- மாணவிகளிடம் தேர்வை சிறப்பாக எழுதும்படி அறிவுறுத்தினார். மேலும் பிளஸ்-2 மாணவ- மாணவிகளை 100 சதவீதம் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் எனவும் பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற வைக்க முழு முயற்சி செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா அறிவுரை வழங்கினார்.