மாவட்ட செய்திகள்

திண்டிவனத்தில்9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவுவாலிபர் கைது + "||" + 9 year old girl arrested for sexual harassment

திண்டிவனத்தில்9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவுவாலிபர் கைது

திண்டிவனத்தில்9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவுவாலிபர் கைது
வாலிபர் கைது
திண்டிவனம்,
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவள் 9 வயது சிறுமி. இவள் கடந்த சில மாதங்களாக திண்டிவனம் அடுத்த மயிலம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்தாள். சம்பவத்தன்று இரவு தோசை வாங்க அதேபகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றாள். அப்போது அங்கு வந்த மயிலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகப்பன் மகன் கவுதம்(வயது 27) என்பவர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கி பின்புறம் உள்ள புளியந்தோப்பில் வைத்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. 
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு சென்று, நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் கூறினாள். இதுகுறித்து சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரின்பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து, கவுதமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மணல் கடத்தல் வாலிபர் கைது டிராக்டர் பறிமுதல்
மணல் கடத்தல் வாலிபர் கைது டிராக்டர் பறிமுதல்
2. புளியங்குடியில் பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது
புளியங்குடியில் பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. தியாகதுருகம் அருகே இரும்பு பொருட்களை திருடிய வாலிபர் கைது
தியாகதுருகம் அருகே இரும்பு பொருட்களை திருடிய வாலிபர் கைது