மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அ தி மு க பிரமுகர் பரிதாபமாக இறந்தார் + "||" + accident

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அ தி மு க பிரமுகர் பரிதாபமாக இறந்தார்

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அ தி மு க பிரமுகர் பரிதாபமாக இறந்தார்
குண்டடம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அ தி மு க பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
குண்டடம்
குண்டடம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அ.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி போலீ்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது
அ.தி.மு.க. பிரமுகர்
திருப்பூர் ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட், இவரது மகன் ஜேம்ஸ் என்கிற ஜெயச்சந்திரன் (வயது 34). இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்து வந்தார். அத்துடன் அ.தி.மு.க. ராயபுரம் கிளை செயலாளராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஜேம்ஸ் பொங்கலூரைச் சேர்ந்த தனது நண்பர் முகுந்தனுடன் குண்டடம் அருகே உள்ள தாயம்பாளையம்- கவுண்டம்பாளையம் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிளை முகுந்தன் ஓட்டிச்சென்றார். ஜேம்ஸ் பின்னால் அமர்ந்திருந்தார். 
பரிதாப சாவு
அந்த பகுதியில் உள்ள பீலிக்காம்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் சென்ற போது அந்த இடத்தில் உள்ள ஒரு வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் வேகமாக ஏறி இறங்கியது. இதில் திடீரென்று மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறியதால் எதிர்பாராதவிதமாக பின்னால் அமர்ந்திருந்த ஜேம்ஸ் தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த  ஜேம்சை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ஜேம்ஸ் பரிதாபமாக இறந்தார். 
இந்த விபத்து பற்றிய புகாரின் பேரில் குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.