மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா + "||" + corona rate increases in namakal

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 317 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,334 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 16 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் இயங்கி வரும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,075 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,075 ஆக உயர்வு
2. நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
3. நாமக்கல், பரமத்திவேலூரில் கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல், பரமத்திவேலூரில் கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
4. நாமக்கல், திருச்செங்கோட்டில் வாகன சோதனையில் ரூ.2.40 லட்சம் பறிமுதல்
நாமக்கல், திருச்செங்கோட்டில் வாகன சோதனையில் ரூ.2.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
5. நாமக்கல்லில் தொழில் அதிபர் வீட்டில் திருடிய பெண் உள்பட 6 பேர் கைது
நாமக்கல்லில் தொழில் அதிபர் வீட்டில் திருட்டு போன ரூ.11½ லட்சத்தை மீட்ட போலீசார் பெண் உள்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.