மாவட்ட செய்திகள்

காட்பாடியில் விபத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த போலீஸ்காரர் + "||" + The policeman who buried the body of the person who died in the accident

காட்பாடியில் விபத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த போலீஸ்காரர்

காட்பாடியில் விபத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த போலீஸ்காரர்
காட்பாடியில் விபத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த போலீஸ்காரர்
காட்பாடி

காட்பாடி குடியாத்தம் சாலையில் கடந்த வாரம் சாலை விபத்து நடந்தது. இதில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்துவிட்டார். காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைப்பற்றி துண்டு பிரசுரங்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தினர். இருந்தாலும் யாரும் வந்து உடலை வாங்க வில்லை. 

இதனை அறிந்த காட்பாடி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் ஜெகநாத் என்பவர் அந்த உடலை பெற்று விருதம்பட்டில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்து மரியாதை செலுத்தினார். அவரின் மனிதநேய செயலை பொதுமக்கள் பாராட்டினர்.