ஒரே நாளில் 154 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 154 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 April 2021 5:40 PM GMT (Updated: 8 April 2021 5:40 PM GMT)

ஒரே நாளில் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. 
இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 155-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 55 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 93-ஆக உள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 834 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுதவிர கொரோனாவுக்கு சிகிச்சை பலன் இன்றி 228 பேர் பலியாகியுள்ளனர். பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story