மாவட்ட செய்திகள்

சாலையின் மைய தடுப்பில் மோதிய லாரி + "||" + lorry

சாலையின் மைய தடுப்பில் மோதிய லாரி

சாலையின் மைய தடுப்பில்  மோதிய லாரி
சாலையின் மைய தடுப்பில் லாரி மோதியது.
காங்கேயம்
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து சாம்பல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று காங்கேயம் நோக்கி வந்துகொண்டிருந்தது. இந்த லாரி நேற்று மாலை 5 மணியளவில் காங்கேயம் அடுத்துள்ள ஆலாம்பாடி பகுதியில் வந்துகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலையின் மைய தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன் சக்கரங்கள் இரண்டும் தனியாக கழன்று சென்றது. மேலும் லாரியின் முன்பக்க பாகங்கள் சேதம் அடைந்தது, அதிஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் காயங்களின்றி உயிர் தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைத்து, லாரியை சங்கிலிகள் மூலம் பிணைக்கப்பட்டு, லாரியை தூக்கி சாலையின் ஓரத்திற்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. பின்னர் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சேதமடைந்த சாலையின் மைய தடுப்பு இடிபாடுகளை அகற்றி, வாகன போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.