மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக 12 ரெயில்கள் ரத்து + "||" + railstop

பராமரிப்பு பணி காரணமாக 12 ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக 12 ரெயில்கள் ரத்து
வடமாநிலத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக 12 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
திருப்பூர்
வடமாநிலத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக 12 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
12 ரெயில்கள் ரத்து
செகந்திராபாத் மண்டல பகுதியில் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் 12 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி கோவை-நிஜாமுதீன் சிறப்பு ரெயில் (எண்.06077) கோவையில் இருந்து 11-ந் தேதி மற்றும் 18-ந் தேதி புறப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. நிஜாமுதீன்-கோவை சிறப்பு ரெயில் (எண்.06078) நிஜாமுதீனில் இருந்து வருகிற 14-ந் தேதி மற்றும் 21-ந் தேதி புறப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோரக்பூர்-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.02511) கோரக்பூரில் இருந்து வருகிற 11-ந் தேதி, 15-ந் தேதி, 16-ந் தேதி, 18-ந் தேதி, 22 மற்றும் 23-ந் தேதிகளில் புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் கொச்சுவேலி-கோரக்பூர் ரெயில் (எண்.02512) கொச்சுவேலியில் இருந்து வருகிற 13, 14, 18, 20, 21 ஆகிய தேதிகளில் புறப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
பருணி-எர்ணாகுளம்
பருணி-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.02521) சேலம், கோவை வழியாக செல்லும். இந்த ரெயில் பருணியில் இருந்து 12 மற்றும் 19-ந் தேதி புறப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் எர்ணாகுளம்-பருணிக்கு கோவை, சேலம் வழியாக செல்லும் ரெயில் (02522) எர்ணாகுளத்தில் இருந்து 16 மற்றும் 23-ந் தேதி புறப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி-ஸ்ரீமாதா வைஷ்ணவ் தேவி கத்ராவுக்கு கரூர், சேலம் வழியாக செல்லும் ரெயில் (எண்.06787) திருநெல்வேலியில் இருந்து 12 மற்றும் 19-ந் தேதிகளில் புறப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் ஸ்ரீமாதா வைஷ்ணவ் தேவி கத்ராவில் இருந்து திருநெல்வேலிக்கு சேலம், கரூர் வழியாக செல்லும் ரெயில் (எண்.06788) ஸ்ரீமகா வைஷ்ணவ் தேவி கத்ராவில் இருந்து 15 மற்றும் 22-ந் தேதியில் புறப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்-நிஜாமுதீன் ரெயில்
திருவனந்தபுரம்-நிஜாமுதீனுக்கு கோவை, சேலம் வழியாக செல்லும் ரெயில் (எண்.06167) திருவனந்தபுரத்தில் இருந்து 13 மற்றும் 20-ந் தேதிகளில் புறப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் நிஜாமுதீன்-திருவனந்தபுரத்துக்கு சேலம், கோவை வழியாக செல்லும் ரெயில் (எண்.06168) நிஜாமுதீனில் இருந்து 16 மற்றும் 23-ந் தேதி புறப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோர்பா-கொச்சுவேலிக்கு சேலம், கோவை வழியாக செல்லும் ரெயில் (எண்.02647) கோர்பாவில் இருந்து 14,17,21, 24-ந் தேதிகளில் கோர்பாவில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் கொச்சுவேலி-கோர்பாவுக்கு கோவை, சேலம் வழியாக செல்லும் ரெயில் (எண்.02648) கொச்சுவேலியில் இருந்து 12, 15, 19, 22-ந் தேதிகளில் புறப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.