மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் அபராதம் கரூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை + "||" + Warning

பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் அபராதம் கரூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் அபராதம்  கரூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என கரூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர்
ஆலோசனை கூட்டம்
கரூர் நகராட்சி கூட்டரங்கில் நேற்று தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையர் சுதா தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் யோகானந்த் முன்னிலை வகித்தார். 
இக்கூட்டத்தில் கொரோனா 2-ம் அலை உருவாகி அதிகரித்து வருவதால் தங்களது வணிக நிறுவனங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களை முககவசம் அணிந்து வர அறிவுறுத்த வேண்டும். சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும்.
ஆதார் எண் விவரம்
மேலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் பட்சத்தில், நகராட்சி சார்பில் வணிக நிறுவனங்களுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  இதற்காக பணியாளர்களின் ஆதார் எண் விவரங்களை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 
அபராதம் 
பின்னர் நகராட்சி ஆணையர் சுதா நிருபர்களிடம் கூறுகையில், முககவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த அச்சம் குறைந்து விட்டது. வீட்டிலிருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் காலணிஅணிந்து வெளியே வருவதை போல கட்டாயம் முககவசம் அணிந்து வெளியே வரவேண்டும். இதனை தவறினால் அபராதம் வசூலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தேர்தல் நாளன்று பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.