மாவட்ட செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை + "||" + Teen commits suicide by drinking poison

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
திருக்கோவிலூர் அருகே தந்தை திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திருக்கோவிலூர், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தயாளன். விவசாயி. இவருடைய மகள் பரமேஸ்வரி (வயது 18). இவர் சம்பவத்தன்று வீட்டு வேலை ஏதும் செய்யாமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது வீட்டுக்கு வந்த தயாளன் மகளிடம் ஏன் வீட்டு வேலை செய்யாமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கிறாய் எனக்கேட்டு  திட்டி கண்டித்ததோடு, பரமேஸ்வரியை  செல்லங்குப்பம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்து விட்டார்.

தற்கொலை

இதனால் மனமுடைந்த பரமேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பாட்டி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.
இதில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய பரமேஸ்வரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரமேஸ்வரி இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. மதுராந்தகம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
மதுராந்தகம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
2. திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. லாலாபேட்டை அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை
லாலாபேட்டை அருகே குடும்ப தகராறால் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. சட்டசபை தேர்தல் நடந்த மறுநாளில் கள்ளக்குறிச்சி கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீஸ் தீவிர விசாரணை
சட்டசபை தேர்தல் முடிந்த மறுநாளில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமை காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
சோழவந்தான் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.