மாவட்ட செய்திகள்

ஒரு கிலோ எலுமிச்சை ரூ.60-க்கு விற்பனை + "||" + Sale of lemons

ஒரு கிலோ எலுமிச்சை ரூ.60-க்கு விற்பனை

ஒரு கிலோ எலுமிச்சை ரூ.60-க்கு விற்பனை
ஒரு கிலோ எலுமிச்சை ரூ.60-க்கு விற்பனையானது.
கீரமங்கலம்
கீரமங்கலம் மற்றும் கீரமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் தென்னை உள்ளிட்ட தோப்புகளில் ஊடுபயிராக எலுமிச்சை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நன்கு வளர்ச்சி அடைந்த எலுமிச்சை பறிக்கப்பட்டு கீரமங்கலம், கொத்தமங்கலம், பனங்குளம், கைகாட்டி ஆகிய பகுதிகளில் உள்ள காய்கனி கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ ரூ.40 வரை கொள்முதல் செய்யப்பட்ட எலுமிச்சை தற்போது கடும் வெயில் காரணமாகவும், தேவை அதிகரித்ததன் காரணமாகவும் கிலோ ரூ.60-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.