மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் அருகே தாய்-மகன் உள்பட 4 பேர் மீது தாக்குதல் + "||" + Attack on 4 people including mother son

பெரம்பலூர் அருகே தாய்-மகன் உள்பட 4 பேர் மீது தாக்குதல்

பெரம்பலூர் அருகே தாய்-மகன் உள்பட 4 பேர் மீது தாக்குதல்
பெரம்பலூர் அருகே தாய்-மகன் உள்பட 4 பேர் தாக்கப்பட்டது தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்

பெரம்பலூரை அடுத்த லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் அருண்குமார்(வயது 21). இவர் வெள்ளாளர் தெருவில் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வாகனத்தில் உட்கார்ந்திருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த 18 வயது சிறுவன், தனது மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றபோது அருண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது லேசாக மோதியுள்ளார். 

இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அருண்குமார், மாரியம்மன் கோவிலில் அமர்ந்திருந்தபோது அந்த சிறுவன் அவனது சகோதரர் கவியரசன், நண்பர்கள் சரண், அருண் மற்றும் 3 பேர் அங்கு வந்து அருண்குமாரை தாக்கியுள்ளனர். இதனை தடுத்த அருண்குமாரின் தாய் உமாராணி, உறவினர்கள் சதீஷ், சுரேஷ்குமார் ஆகிய 3 பேரும் தாக்கப்பட்டனர். அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்று வீடு திரும்பினர். 

இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், அந்த சிறுவன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மனைவியை சித்ரவதை செய்த ஆயுதப்படை போலீஸ்காரர்
கூடுதலாக 50 பவுன் நகை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 5 பேர் மீது கோர்ட்டு உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2. சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேர் மீது வழக்கு
மதுரை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
3. முன்னாள் அமைச்சர் குறித்து அவதூறு தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் வழக்கு
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான பி.வி.ரமணா போட்டியிடுகிறார்.
5. அ.தி.மு.க.-தி.மு.க.வினர் மோதல்; 26 பேர் மீது வழக்கு
திருப்புவனம் அருகே அ.தி.மு.க.-தி.மு.க.வினர் நேருக்கு நேர் மோதி கொண்டனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.