மாவட்ட செய்திகள்

மாயமான பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார் + "||" + The woman floated the corpse in the well

மாயமான பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார்

மாயமான பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார்
மாயமான பெண் கிணற்றில் பிணமாக மிதந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் கிராமம், முல்லை நகரைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் மஞ்சுளா(வயது 40). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜாவுக்கும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கார்த்திக் (14) என்ற மகன் உள்ளார். 

இந்தநிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராஜா உயிரிழந்ததால், மஞ்சுளா மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள தனது சகோதரர் கருப்பையா வீட்டுக்கு மஞ்சுளா வந்தார். பின்னர் 3 நாட்களாக மஞ்சுளாவை காணவில்லை. இதற்கிடையே அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது விவசாய கிணற்றில் மஞ்சுளா பிணமாக மிதந்தது நேற்று தெரியவந்தது. 

இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மங்சுளாவின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதுகுறித்து கருப்பையா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே உள்ள நாகாத்தம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
2. வியாசர்பாடி பகுதியில் தலை, மார்பில் படுகாயங்களுடன் வாலிபர் பிணம்; கொலையா? போலீஸ் விசாரணை
வியாசர்பாடியில், தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயத்துடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
3. மகள் திருமணம் நடக்க இருந்த நிலையில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் விவசாயி பிணம் மீட்பு
மகள் திருமணம் நடக்க இருந்த நிலையில் விவசாயி ரெயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.