துணியால் மூடிய தலைவர்கள் சிலையை திறக்க கோரிக்கை


துணியால் மூடிய தலைவர்கள் சிலையை திறக்க கோரிக்கை
x
தினத்தந்தி 8 April 2021 7:22 PM GMT (Updated: 8 April 2021 8:35 PM GMT)

துணியால் மூடிய தலைவர்கள் சிலையை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

தமிழக சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வாக்குப் பெட்டிகள் பத்திரமாக பல அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலின்போது நடத்தை விதிகளின் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள் சிலைகள் துணியினால் மறைக்கப்பட்டது. 

இந்தநிலையில் தேர்தல் முடிவடைந்ததால் மூடப்பட்டுள்ள தலைவர்களின் சிலையை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் மூடப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்., அண்ணாசிலை மற்றும் விருதுநகர் மாவட்டம் முழுவதும் தலைவர்களின் சிலையில் மூடப்பட்டிருந்த துணிகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் தங்கவேலு கூறும்போது, தேர்தல் ஆணையம் மக்களால் போற்றப்படும் தலைவர்களை மறைத்து ஜனநாயகத்தை காக்க முயல்வது மறைந்த தலைவர்களின் தியாகத்தை, மக்களுக்காக அவர்கள் செய்த அர்ப்பணிப்பை மறைக்கின்ற செயலாகிவிடும். எனவே வருங்காலங்களில் தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட செயல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

Next Story