மது விற்ற 4 பேர் கைது
உடையார்பாளையம், மீன்சுருட்டி பகுதிகளில் மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். 109 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் கீழவெளி காலனி தெருவை சேர்ந்த அருண்பாண்டியன் (வயது 30), தத்தனூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (55), சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த நக்கீரன் (43) ஆகிய 3 பேரும் மதுபாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 97 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டதில், மீன்சுருட்டி அருகே உள்ள சுண்டிப்பள்ளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரித்திவிராஜன்(30), வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 12 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story