மாவட்ட செய்திகள்

மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல் + "||" + Seizure of sand smuggled cow

மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்

மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்
மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல் செய்யப்பட்டது.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் சாத்தம்பாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாத்தம்பாடி மெயின் ரோட்டில் சென்ற ஒரு மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்ய முயன்றனர். மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர் சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் மாட்டு வண்டியை சோதனை செய்தபோது அதில் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து ஸ்ரீபுரந்தான் பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற நபரை தேடி வருகிறார்கள்.