மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்; தொழிலாளிக்கு வலைவீச்சு


மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்; தொழிலாளிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 April 2021 12:57 AM IST (Updated: 9 April 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சின்னகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன்(வயது 34). தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 36 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததாகவும், அதற்காக பெண் வீட்டார் நிலத்தை அவர் பெயரில் எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் திருக்களம்பூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென ராஜ்மோகன் தலைமறைவாகி விட்டார். இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ராஜ்மோகன் மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து ராஜ்மோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story