மாவட்ட செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில்உண்டியல் மூலம் ரூ.1 கோடி காணிக்கை வசூல்3½ கிலோ தங்கமும் கிடைத்தது + "||" + Rs 1 crore was collected from the Uṇṭiyal at the Samayapuram Mariamman temple and also 30 kg of gold was also collected

சமயபுரம் மாரியம்மன் கோவிலில்உண்டியல் மூலம் ரூ.1 கோடி காணிக்கை வசூல்3½ கிலோ தங்கமும் கிடைத்தது

சமயபுரம் மாரியம்மன் கோவிலில்உண்டியல் மூலம் ரூ.1 கோடி காணிக்கை வசூல்3½ கிலோ தங்கமும் கிடைத்தது
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.1 கோடி காணிக்கை வசூல் ஆனது. மேலும் 3½ கிலோ தங்கமும் கிடைத்தது.
சமயபுரம், 
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்திபெற்ற சமயபுரம்மாரியம்மன் கோவிலில் மாதம் இருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கோவில் இணைஆணையர் கல்யாணி, இந்து சமய அறநிலையத்துறை திருச்சி உதவிஆணையர் மோகனசுந்தரம், வெக்காளியம்மன் கோவில் உதவிஆணையர் ஞானசேகர், கோவில் மேலாளர் லட்சுமணன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில்ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. 
இதில், காணிக்கையாக ரூ.1 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரத்து 396, 3 கிலோ 481 கிராம் தங்கம், 5 கிலோ 430 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.