வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் தகராறு: அமமுக நிர்வாகி மீது வழக்கு


வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் தகராறு: அமமுக நிர்வாகி மீது வழக்கு
x
தினத்தந்தி 8 April 2021 7:30 PM GMT (Updated: 8 April 2021 7:30 PM GMT)

வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் தகராறு செய்ததாக அமமுக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி,
திருச்சி பாலக்கரை தனமணிகாலனியை சேர்ந்தவர் யேசுராஜ். இவருடைய மனைவி செலின்மேரி (வயது 51). இவர் துரைசாமிபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் அதேபள்ளியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலராக நியமிக்கப்பட்டு இருந்தார். கடந்த 6-ந் தேதி தேர்தல் நாளன்று பகல் பள்ளியில் கட்சி நிர்வாகிகளுக்கு அ.ம.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட தலைவர் சரவணன் உணவு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார். அப்போது ஆசிரியை செலின்மேரிக்கும், சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் செலின்மேரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர் அளித்த புகாரின்பேரில், சரவணன் மீது பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் அ.ம.மு.க. நிர்வாகி சரவணனை மிரட்டியதாக அளித்த புகாரின்பேரில், செலின்மேரியின் மகன் லெவின் (29), அரியமங்கலம் குவளக்குடியை சேர்ந்த கவுதமன் (29) மற்றும் 15 பேர் மீது பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story