290 மேல்நிலைப்பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு


290 மேல்நிலைப்பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 9 April 2021 1:03 AM IST (Updated: 9 April 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங் களாக செயல் பட்ட 290 மேல்நிலைப் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.

290 மேல்நிலைப்பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு
உப்பிலியபுரம், 

திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி  மையங் களாக செயல் பட்ட 290 மேல்நிலைப் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.

வாக்குச்சாவடிகள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 1,147 வாக்குப்பதிவு மையங்களில் மொத்தம் 3,292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இவற்றில் பெரும்பாலான மையங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு கடந்த 6-ந்தேதி கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் உள்பட மொத்தம் 17 லட்சத்து 20 ஆயிரத்து 279 பேர் வந்து வாக்களித்து சென்றனர்.

கிருமி நாசினி தெளிப்பு

இந்தநிலையில் தற்போது தேர்தல் முடிந்து நேற்று பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் தொடங்கின. இதனால் வாக்குச்சாவடியாக செயல்பட்ட 290 ேமல்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் நேற்று காலை சுத்தம் செய்யப்பட்டன. அத்துடன் கொரோனா பரவாமல் தடுக்க கிருமிநாசினிகள் தெளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, துறையூர் தொகுதிக்கு உட்பட்ட உப்பிலியபுரம் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிகளிலும், உப்பிலியபுரம் ஒன்றிய பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 124 வாக்குச்சாவடிகளில் கிரிமிநாசினி தெளிப்பு பணி நேற்று நடைபெற்றது. உப்பிலியபுரம் பேரூராட்சியில் தனி அலுவலர் இளவரசி தலைமையிலும், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி தனி அலுவலர் தியாகராஜன் தலைமையிலும், ஊராட்சி நிர்வாகத்தினர் முன்னிலையிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Next Story