காரில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
காரில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மூட்டை-மூட்டையாக சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதுகுறித்து காரில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியபோது சிவகங்கை மாவட்டம் புதுவயலில் உள்ள கோழிப்பண்ணைக்கு தீவனத்திற்காக ரேஷன் அரிசி கடத்திச் சென்றதாக தெரிய வந்தது. அதன்பேரில் கடத்திச் வரப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தென்னரசு (வயது 30), மாங்குடி (22), மற்றொரு தென்னரசு (33) ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story