கொரோனாவுக்கு கம்யூனிஸ்டு பிரமுகர் பலியானார்


கொரோனாவுக்கு கம்யூனிஸ்டு பிரமுகர் பலியானார்
x
தினத்தந்தி 9 April 2021 1:19 AM IST (Updated: 9 April 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு கம்யூனிஸ்டு பிரமுகர் பலி

அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை சேர்ந்தவர் சந்திரமோகன்(வயது 54). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர். இவர் உடல் நிலை சரியில்லாததால் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து அவருக்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் வட்டார மருத்துவ அலுவலர் சஞ்சை பாண்டியன் தலைமையில் சுகாதார குழுவினர் பந்தல்குடி பகுதியில் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Next Story