மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த மூதாட்டி சாவு + "||" + Death of an elderly woman who fell off a motorcycle

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த மூதாட்டி சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த மூதாட்டி சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் கணபதியம்மாள்(வயது 66). இவருக்கு சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் அடிக்கடி மயங்கி கீழே விழுவார். இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக அவருடைய மகனுடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் காயத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு கம்யூனிஸ்டு பிரமுகர் பலியானார்
கொரோனாவுக்கு கம்யூனிஸ்டு பிரமுகர் பலி
2. விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
கொட்டாம்பட்டி அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
3. வாகனம் மோதி அ.தி.மு.க. பிரமுகர் சாவு
வாகனம் மோதி அ.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்
4. மராட்டியத்தில் மேலும் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா; 297 பேர் பலி
மராட்டியத்தில் மேலும் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 297 பேர் உயிரிழந்தனர். தாராவியில் 62 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கு கீழே வந்தது, ஒரு நாள் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கு கீழே வந்தது. பலியும் சற்றே குறைந்துள்ளது.