சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேர் மீது வழக்கு
மதுரை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
நாகமலைபுதுக்கோட்டை,
மதுரை அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படாததால் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நாகமலைபுதுக்கோட்டையில் ஒன்று திரண்டு மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக கரடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பாண்டி(வயது 50) நாகமலை புதுக்கோட்டை போலீசில் அனுமதியின்றி மறியல் நடத்தியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் மனு கொடுத்தார்.
இந்த புகார் மனுவின் பேரில் ஆலம்பட்டியை சேர்ந்த நாகமலை மகன் பாண்டி(50) மற்றும் பெண்கள் உள்பட 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story