எல்லை பாதுகாப்பு படை வீரர் உள்பட 2 பேர் படுகாயம்
திருமங்கலம் அருகே தடுப்பு சுவரில் கார் மோதி எல்லை பாதுகாப்பு படை வீரர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் கோபி (வயது 40). எல்லை பாதுகாப்பு படை வீரர். இவரும், நண்பர் கணேசனும் காரில் திருமங்கலம் வந்திருந்தனர். பின்னர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திருமங்கலத்தில் இருந்து ஆலம்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தனர். திருமங்கலம் தெற்கு தெரு அருகே கார் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்ைட இழந்து சாலையில் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோபி, கணேசன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினி உத்தரவின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story